ஆனையிறவு வாகன விபத்தில் ஒருவர் பலி ; 8 பேர் காயம்




 


கிளிநொச்சி - ஆனையிறவில் இன்று(24) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பஸ்ஸொன்றும் ஹயஸ் ரக வாகனமொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன. 

இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். 

இவர்களில் ஐவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

விபத்து தொடர்பில் ஆனையிறவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.