4.5 அடி நீர் வெளியேற்றப்பட்டது




 .


(சுகிர்தகுமார் 0777113659)


 அம்பாரை மாவட்டத்தில் அடை மழை பெய்துவரும் நிலையில் சேனநாயக்க சமுத்திரத்தின் 5 வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்து மத்திய நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.
சமுத்திரத்தின் நீர் மட்டம் 106 அடியாக உயர்ந்துள்ள நிலையில் தற்போது 4.5 அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கும் மேலதிகமாக மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் 750 கியுசெக் நீரும் சேர்த்து 4900 கியுசெக் நீரும் கல்லோயா ஆற்றிலிருந்து விடுவிக்கப்படுவதாக அவர் கூறினார்.
மாவட்டத்தின் தாழ் நில பிரதேசங்கள் ஆபத்தானவை எனவும் மற்றும் நீர் நிலைகளை அண்டி வாழும் மக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேநேரம் அம்பாரை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
 பெய்து வரும் அடை மழையினால் மாவட்டத்தின் அக்கரைப்பற்று சந்தைப்பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் ஆலையடிவேம்பு திருக்கோவில் பொத்துவில் கல்முனை நிந்தவூர் காரைதீவு  அம்பாரை உள்ளிட்ட பிரதேசங்களின் தாழ் நில பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது.
 வீதிகளும் குடியிருப்புக்களும்; வெள்ளத்தால் மூழ்கியுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் தாழ் நிலப்பகுதிகளும் சில வீpதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சின்னமுகத்துவாரத்தின் ஊடாக வெள்ள நீர் வழிந்தோடுகின்றது.
வெள்ள நிலை தொடர்பில் பிரதேச செயலகமும் பிரதேச சபையும் கண்காணித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.