2024 உலகளாவிய தேர்தல் ஆண்டு,முதல் தேர்தல் பங்களாதேஸில்








இலங்கை ,இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஸ்,இந்தோனேசியா, அமெரிக்கா, பிரிட்டன், மெக்சிகோ, தாய்வான் உட்பட உலக நாடுகள் 80 நாடுகளில்,தேர்தல்கள் இடம்பெறுகின்றன.

2024ஆம் ஆண்டு உலகளாவிய தேர்தல் ஆண்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



தேர்தல் நடைபெறும் நாடுகளில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்கா, இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன.



அந்தத் தேர்தல்களில் வாக்களிக்கப் போகும் வாக்காளர்களின் எண்ணிக்கை 4 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கம்! மக்களுக்கு அரசு விடுத்த பகிரங்க எச்சரிக்கை

வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கம்! மக்களுக்கு அரசு விடுத்த பகிரங்க எச்சரிக்கை

முதல் பெரிய தேர்தல்

இதனால் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் இந்த ஆண்டு தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.


2024 உலகளாவிய தேர்தல் ஆண்டு : உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட முக்கிய தேர்தல்கள் | World 80 Elections Welcome To The Year Of Voter


தாய்வானில் ஜனவரி 13ஆம் திகதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தல், இந்த ஆண்டு நடைபெறும் முதல் பெரிய தேர்தல் ஆகும்.


அத்துடன், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அதிபர் தேர்தல்

மேலும், அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளதுடன், இலங்கையிலும் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.