ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (ஜன. 02) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்தது.
என்.ஹெச்.கே எனும் ஜப்பானிய அரசு ஊடகத்தில் அதன் காணொளி வெளியானது. அதில், விமானத்தின் ஜன்னல்கள் மற்றும் அதன் கீழே தீப்பிடித்து எரிவதை காண முடிந்தது. விமானத்தின் ஓடுதளத்திலும் தீ பரவியது.
அந்த விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த மற்றொரு விமானத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, அதிகாரிகளை மேற்கோள் காட்டி என்.ஹெச்.கே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்டபோது உள்ளே பயணிகள் இருந்தனர்.
விமானத்திற்குள் இருந்த 367 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட 379 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக, என்.ஹெச்.கே. ஊடகம் தெரிவித்துள்ளது.
ஜே.ஏ.எல். 516 என்ற அந்த விமானம் ஹொகைடோவிலிருந்து புறப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
Post a Comment
Post a Comment