Rep/SukirthKumR
அக்கரைப்பற்று இலங்கை வங்கியினூடாக கிடைக்கப்பெற்ற நல்ல உறவு. காணும் இடம்மெல்லாம் சுகிர் அண்ணன் எப்படி சுகம்.? என்ன செய்து தரவேண்டும் ? என சிறிய புன்முறுவலுடன் உரையாடி எவ்வளவு வேலைப்பழு இருந்தாலும் கடமையினை செய்து தரும் தம்பி துசாந்தனின் மறைவு ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நீங்கள் எதிர்பார்த்த CRM வந்து விட்டது. இனி உங்கள் வேலை இலகுபடுத்தப்படும் என அவ்வப்போது மகிழ்ந்து கொள்ளும் நல்லுள்ளம். இலங்கை வங்கியில் நடைபெறும் நிகழ்விற்கு நிகழ்ச்சி தொகுப்பாளனும் அவரே. நம்மை அன்போடு உபசரிக்கும் நற்குணம் கொண்டவரும் அவரே.
அக்கரைப்பற்று இலங்கை வங்கியில் சில நிகழ்வுகளில் நான் அவ்வப்போது கலந்து கொண்டாலும் துசாந்தனின் பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொள்ளவோ அல்லது அவரது இடமாற்றத்தின் பின் நன்றி சொல்லவோ கிடைக்காமை மிக மன வேதனை தருகின்றது.
எதுவானாலும் எல்லாம் அவன் செயல் என கடந்து செல்ல முடியவில்லை. நமக்கு தேவையான பலரை அன்மைக்காலமாக இறைவன்விரைவாகவே அழைத்துக்கொள்வதன் காரணம் விளங்கவில்லை
உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்.
Post a Comment
Post a Comment