(எம்.என்.எம்.அப்ராஸ்)
சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் 19வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள்,நாபீர் பொண்டேஷனின் சம்மாந்துறை தலைமை காரியாலயத்தில்(26)இன்று இடம்பெற்றது.
பிரபல சமூக சேவையாளரும்,தொழிலதிபரும்,
நாபீர் பொண்டேஷன் ஸ்தாபகரும்,பொறியியலாளருமான கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்களின் வழிகாட்டலில்,சுனாமி அனர்த்தத்தினால் மரணித்த உறவுகளுக்கான கத்தமுல் குர்ஆன் தமாம் நிகழ்வு கண்ணியத்துக்குரிய உலமாக்களினால் நடத்தப்பட்டது.
துஆ பிரார்த்தனை மற்றும் சொற்பொழிவுகளை - கல்முனை தாருஸ்ஸபா அமையத்தின் ஸ்தாபகத் தலைவர் மெளலவி அல்ஹாஜ் சபா முஹம்மது நஜாஹி முகத்தமுல் காதிரி அவர்கள் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வினை இ.சி.எம்.(ECM) நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீட் தலைமை தாங்கி நடத்தியதோடு நாபீர் பௌண்டேஷன் உறுப்பினர்கள்,இ.சி.எம்(ECM)நி றுவன உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வை தொகுபினை அறிவிப்பாளர் எஸ்.டி ரோஷன் அஷ்ரப் அவர்களும் நன்றியுரையினை அறிவிப்பாளர் ஏ.எல்.நயீம் வழங்கினர்.
Post a Comment
Post a Comment