ஒளி விழா!





 ( வி.ரி. சகாதேவராஜா)


கல்முனை  ஆதார வைத்தியசாலையின் வருடாந்த ஒளி விழா  வைத்தியசாலையின்  சுகநல சேவை கிறிஸ்தவ ஐக்கிய அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் வைத்தியசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நேற்று நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்தியசாலையின்  பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் கலந்து சிறப்பித்தார். 

விசேட அதிதியாக ஓய்வுபெற்ற மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர்.கிறீஸ் நவரெட்ணராஜா , சிறப்பு விருந்தினராக வைத்தியர் டாக்டர். ரேனுகா அருள்தாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் வரவேற்புரையினை சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டாக்டர் எஸ்.என். ரொஷாந்த் வழங்கினார். தொடர்ந்து பாடல்கள், நடன நிகழ்வுகள், கவிதை போன்றன மேடையில் அரங்கேற்றப்பட்டன. மேலும் சிறுவர்களுக்கான பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டது. 

இந் நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்களான டாக்டர் ஜே. மதன் மற்றும் டாக்டர் சா. இராஜேந்திரன் , கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி, தாதிய பரிபாலகர் என். சசிதரன், தாதிய பரிபாலகி திருமதி. எல்.சுஜேந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் ரி. தேவஅருள், பிரதான சுகாதார முகாமைத்துவ உதவியாளர் திருமதி. ரோஸி சுகுமார்,  வைத்திய அதிகாரிகள் மற்றும் ஏனைய வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.


 நிகழ்வின் நன்றியுரை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பினை தாதிய உத்தியோகத்தரான ஏ.என்.டி.அல்விஸ் வழங்கியிருந்தார்.

 அத்துடன் ஒவ்வொரு விடுதிகளுக்கும் நத்தார் தாத்தா சென்று சிறுவர்களையும் நோயாளர்களையும் மகிழ்வூட்டியதுடன் பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.