எங்கும் வெள்ளக்காடு




 


கடந்த சில நாட்களாக பொழிந்த கனமழையையடுத்து காரைதீவு வெள்ளக் காடாக காட்சிளிக்கிறது.

குறிப்பாக கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மக்கள் வெள்ளம் பாய சென்று வருகிறார்கள்.

மேலும் காரைதீவிலுள்ள தாழ் நில பிரதேசங்களிலும் வயல் வெளிகளிலும் வெள்ளம் வெள்ளம் தேங்கி நிற்கிறது.

மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குழாய் நீர் விநியோகம் சீராக இல்லாத நிலையில் மக்கள் பலத்த அசௌகரியத்திற்குள்ளானார்கள்.

வீதி வடிகால்கள் மக்களாலும் பிரதேச சபையினராலும் ஆங்காங்கே சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

பெரும்பாலான வீடு வாசலில் வெள்ளம் தேங்கி நிற்கிறது.

மழை வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பிரதேசங்களை அடையாளம் காண்பதுடன் வெள்ளம் ஏற்படுவதற்கான மூல காரணங்களை அடையாளம் கண்டு அதனை நிவர்த்தி செய்வதற்கான ஒழுங்குகளை உரிய திணைக்களத்தினுடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ சேவை தெரிவித்துள்ளது.