முன்னோடிக் கருத்தரங்கு




 


வி.சுகிர்தகுமார் 0777113659  


 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான இறுதி நிலைப் பரீட்சைக்குரிய முன்னோடிக்கருத்தரங்கு ஆலையடிவேம்பு  சுவாமி விபுலானந்தர் சிறுவர் இல்ல மண்டபத்தில் இன்று (16) நடைபெற்றது.  
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ய.அநிருத்தனன் வழிகாட்டலினுடாக மாவட்ட இந்துக்கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜி தலமையில் இடம்பெற்ற முன்னோடிக்கருத்தரங்கில்  வளவாளர்களாக சைவப்புலவர் யோ.கஜேந்திரா சைவப்புலவர் மெ.தயமுகசர்மா கலந்து கொண்டதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் சர்மிளா பிசாந், திருக்கோவில் பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் தேவராஜ் நிஷாந்தினி,  மற்றும்  ஆகியோருடன் விபுலாநந்த சிறுவர் இல்ல தலைவர் திரு கைலாயபிள்ளை கலந்து கொண்டார்  
இதில் ஆலையடிவேம்பு ,திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த 200 மாணவர்கள் கலந்துகொண்டதுடன் இந்து சமய வரலாறு, இந்துசமய இலக்கியம், இந்துசமய மெய்யியல், இந்துசமய வாழ்வியல் உள்ளிட்ட பாடத்திட்டங்கள் உள்ளடங்கலாக பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பயிற்சி நெறியில் கலந்து கொண்ட மாணவர்கள் முன்னோடிக்கருத்தரங்கினூடாக நன்மையடைந்ததுடன் பயிற்சி நெறியினை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.