"உலக எயிட்ஸ் தின விழிப்புணர்வூட்டல் சைக்கிளோட்டம்"




 


நூருல் ஹுதா உமர்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் வழிகாட்டலிலும், கல்முனை பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.என்.எம். தில்ஷான் அவர்களின் ஒருங்கிணைப்பிலும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலை ஏற்பாடு செய்திருந்த "உலக எயிட்ஸ் தின விழிப்புணர்வூட்டல் சைக்கிளோட்டம்", வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.பி. அப்துல் வாஜித் தலைமையில் இன்று (01.12.2023) இடம்பெற்றது.

இச் சைக்கிளோட்டத்தில் நிந்தவூர் லிவிங் வெல் (Living Well) அமைப்பின் சைக்கிளோட்ட வீரர்கள் பிரதானமாக பங்குபற்றியதோடு, நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் நிந்தவூர் ஆயுள்வேத வைத்தியசாலை என்பனவும் பங்குபற்றின. இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு விஷேட விழிப்புணர்வு வழங்கப்பட்டது.