இறுதியாக நடந்து முடிந்த க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் கல்முனை கல்வி வலயமானது கிழக்கு மாகாணத்தில் இரண்டாம் இடத்தையும், அதே போன்று அகில இலங்கை ரீதியாக ஏழாம் இடத்தையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளதையிட்டு, கல்முனை அதிபர்கள் சங்கத்தின் தலைவர் இஸட். அஹமட் அவர்களும், செயலாளர், ஏ.ஜி.எம். றிசாத் அவர்களும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்களுக்கும், அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பல செயற்றிட்டங்களை வடிவமைத்து அவற்றை நெறிப்படுத்துவதற்காக உதவி புரிந்து வரும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், மற்றும் வளவாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும் அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டதாவது, விசேடமாக பாடசாலைகளில் இப் பெறுபேறுகளைப் பெறுவதற்காக அயராது உழைத்த அதிபர்கள்,மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளை களத்தில் நின்று மிக வினைதிறனாக கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
மேலும் எதிர்காலத்திலும் நாம் தேசிய மட்டத்தில் முதலிடம் பெறுவதற்கு எமது வலயக்கல்வி பணிப்பாளரின் தலைமையில் செயற்பட சகல தரப்பினரும் முன் வர வேண்டுமென அவ்வூடக அறிக்கையில் தெரிவித்தனர்
Post a Comment
Post a Comment