வி.சுகிர்தகுமார் 0777113659
அம்பாரை மாவட்டத்தில் பெய்து வரும் மழைக்கு மத்தியிலும் நத்தார் தின கொண்டாட்டங்களும் விசேட ஆராதனைகளும் அதனோடினைந்ததான நிகழ்வுகளும் மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.
கடந்த சில வருடங்களாக பல்வேறு காரணங்களால் சிறப்பாக நடைபெற முடியாத நிலையில் இருந்து வந்த நத்தார் தின கொண்டாட்டங்களும் நிகழ்வுகளும் இவ்வருடம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக அக்கரைப்பற்று அக்கரைப்பற்று அசெம்பிளி ஒப் கோட் திருச்சபையி;ல் நத்தார் தின விசேட ஆராதனை இன்று (25) இடம்பெற்றது.
அசெம்பிளி ஒப் கோட் திருச்சபையி;ன் பிரதான போதகர் கே.ரவிகரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பெருந்திரளான தேவ அடியவர்கள் கலந்து கொண்டனர்.
நத்தார் கொண்டாட்டத்தின் சிறப்பிக்கும் முகமாக கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கம் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பற்றிய விளக்கங்கள்; மற்றும் கிறிஸ்துவின் வருகை பற்றிய செய்திகளை போதகர் கே.ரவிகரன் வழங்கியதுடன் அனைத்து இன மக்களோடும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
நாட்டில் சாந்தி சமாதானம் ஏற்படுவதுடன் நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு சுபீட்சமடைந்த நாடாக மலரவேண்டும்; எனவும்; ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் மற்றும் அனைத்து மக்களும் நலமுடன் வாழவும் விசேட பிரார்த்தனை மேற்கொண்டார்.
இதனிடையே பல்வேறுபட்ட ஒளிவிழா கலை நிகழ்வுகள் இங்கு அரங்கேற்றப்பட்டதுடன் நத்தார் தாத்தா பிள்ளைகளோடு சேர்ந்து நடமாடி அனைவரையும் மகிழ்வித்தார். தொடர்ந்து ஒளிவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Post a Comment
Post a Comment