வி.சுகிர்தகுமார் 0777113659
இந்தியாவினை சேர்ந்த அருட்குருநாதர் தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் மற்றும் கொழும்பு இராமகிருஸ்ணமிசன் தலைவர் சுவாமி அட்சராத் மானந்தாஜீ மகராஜ், மட்டக்களப்பு இராமகிருஸ்மிசன் தலைவர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் உள்ளிட்டவர்கள் இன்று (17) அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லத்திற்கு வருகை தந்தனர்.
வருகை தந்த சுவாமிகளை அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் தலைவர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையிலான நிருவாகத்தினர் மாணவர்கள் இணைந்து வரவேற்பளித்தனர்.இதன் பின்னராக வருகை தந்த சுவாமிகள் மாணவர்கள் மற்றும் இல்ல நிருவாகத்தின் மத்தியில் அருளுரைகளை வழங்கினர்.
தொடர்ந்து மாணவர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டதுடன் ஆசியினையும் வழங்கி சென்றனர்.
நிறைவாக அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் தலைவர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளைபிள்ளையின் சேவையினை பாராட்டி சுவாமிகள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய முந்தலில் அம்பாரை மாவட்ட இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் திருவாசக மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு வருகை தந்துள்ள சுவாமிகள் சில தினங்கள் அம்பாரை மாவட்டத்தில் தங்கியிருந்து மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் சமய சமூக நிறுவனங்களுக்கு சென்று சிறப்புரை ஆற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment