பலத்த மழையால் நில்வலா கங்கை மற்றும் களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அந்த ஆறுகளை அண்மித்து வாழும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளத்தினால் தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவ இடைமாறலின் வெலிகம முதல் கனங்கே வரையான பகுதியில் இலகுரக வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதனிடையே, சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் 75 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் மாத்தறை, பொலன்னறுவை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனிடையே, நுவரெலியா, பதுளை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
Post a Comment
Post a Comment