(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு நாள் சாரணர் பயிற்சி முகாம் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஆர்.எம்.நௌஸாத் வழிகாட்டலில் இன்று(02) பாடசாலையில் நடைபெற்றது.
இதில் பிரதம வளவாளர்களாக மேஜர் கே.எம்.தமிம், உதவி மாவட்ட சாரண ஆணையாளர் ஐ.எல்.எம். இப்றாஹிம்,உதவி மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஏ.சலாம்(தொழிநுட்பம்)ஆகியோ ரும் பாடசாலை சாரணர் குழு பொருப்பாசிரியர் ஏ.ஜே.எம்.சஸான் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான எம்.ஜே.எம்.முபீத்,
ஏ.ஜே.எம்.சாபித் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
குறித்த சாரணர் பயிற்சி முகாமினை கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் சகுதுல் நஜீம் மற்றும் கோட்டக்கல்விப்பணிப்பாளர் யூ.எல்.றியாழ், பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ராஸாக் ஆகியோர் பார்வையிட்டதுடன் மாணவர்களும் ஆலோசனை வழிகாட்டல்களையும் மேற்க்கொண்டனர்.
Post a Comment
Post a Comment