பராட்டி கெளரவிப்பு...!





 (எம்.என். எம். அப்ராஸ்)


சம்மாந்துறை,நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலயத்தில் இருந்து முதல் முறையாக கா.பொத.சாதாரண தர பரீட்சைக்கு (GCE O/L) தோற்றி கா.பொத.உயர் தரத்துக்கு கல்வி கற்க தகுதிபெற்ற மாணவர்கள் பராட்டி கெளரவிக்கப் பட்டனர். 

சம்மாந்துறை,நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலயத்தில் தரம் 9 வரை கல்வி நடவடிக்கை இடம்பெற்று வந்த நிலையில்,பாடசாலை மாணவர்களின் கல்வி நலனை கவனத்தில் கொண்டு கா.பொத.சாதாரண தரம் வரை(GCE O/L)அண்மையில் தரம் உயர்த்தப்பட்டது. 


இந் நிலையில் இப் பாடசாலையில் முதல் முறையாக கா.பொத.சாதாரண தர பரீட்சைக்கு (GCE O/L ) தோற்றிய மூன்று மாணவர்களில் இரண்டு மாணவர்கள் கா.பொத.உயர்தரத்துக்கு கல்வி கற்க தகுதி பெற்றனர். குறித்த இரு மாணவர்களை பராட்டி கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.பி.ஹிபத்துல்லா தலைமையில்(13)நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களினால் இரு மாணவர்களும் கௌரவிக்கப்பட்டதுடன்,உயர்தர கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது. 


இதில் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.எல்.யாக்கூப், ஒய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர் முகம்மட் தம்பி, ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் இதன் போது பாடசாலையில் கல்வி கற்கும் தேவையுடைய மாணவர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் முயற்சியினால் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் 25 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.