லங்கா சதொச நிறுவனம் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று (28) முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி, டின் மீன், கிழங்கு, சிவப்பு அரிசி, பருப்பு, வௌ்ளை பச்சை அரிசி, வௌ்ளை நாட்டரிசி ஆகிய பொருட்களின் விலையே குறைக்கப்பட்டுள்ளது.
டின் மீன் 55 ரூபாவாலும், கிழங்கு 5 ரூபாவாலும், சிவப்பு அரிசி 5 ரூபாவாலும், பருப்பு, வௌ்ளை பச்சை அரிசி மற்றும் வௌ்ளை நாட்டரிசி ஆகியவை 1 ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment