அக்கரைப்பற்று திருவள்ளுவர் பாடசாலை மண்டபத்தில்





 (சுகிர்தகுமார்) 0777113659   


 நத்தார் கொண்டாட்டத்தினை முன்னிட்டதாக ஒளி விழா நிகழ்வுகள் பல்வேறு இடங்களிலும் சிறப்பாக அம்பாரை மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக  அக்கரைப்பற்று திருவள்ளுவர் பாடசாலை மண்டபத்தில் அதிபர் தங்கேஸ்வரன்;;; தலைமையில் கிறிஸ்தவ பாட ஆசிரியை குமுதினி கவிகரன்  ஒருங்கிணைப்பில் நேற்று (22) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று அசெம்பிளி ஒப் கோட் திருச்சபையின் போதகர் ரவிகரன் மற்றும் அருட்சகோதரி நிவேதா அருட்சகோதரர் ஜெபநேசன் அருட்சகோதரர் உதயகுமார் ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் யோகராசா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஒளி விழாவினை சிறப்பிக்கும் முகமாக பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் இங்கு அரங்கேற்றப்பட்டதுடன் நத்தார் தாத்தா பிள்ளைகளோடு சேர்ந்து நடமாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
இதேநேரம் ஒளிவிழாவை முன்னிட்டு இடம்பெற்ற கலை நிகழ்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பாடசாலையில் கல்வி பயிலும் 5 ஆம் தரத்திற்கு உட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டமை சிறப்பாக அமைந்தது.
இதேநேரம் உரைகளும் அருட் தந்தை மற்றும் அருட் சகோதரிகளால் வழங்கப்பட்டதுடன் கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கம் கிறிஸ்மஸ் கொண்டாடங்கள் பற்றிய விளக்கங்கள் கிறிஸ்துவின்  வருகை பற்றிய செய்திகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அனைத்து இன மக்களோடும் ஒற்றுமையாக வாழ வேண்டும் கேட்டுக் கொண்டனர்.
ஆசிரியர்களை தெய்வமாக நினைத்து மாணவர்கள் கற்கை செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன் ஒழுக்கமுள்ளவர்களாகவும் நடந்து கொள்வது அவசியம் என்றனர்.