உலக எயிட்ஸ் தினம் - பிரதான நிகழ்வும், மரநடுகையும்




 


நூருல் ஹுதா உமர் 


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் வழிகாட்டலிலும், கல்முனை பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.என்.எம். தில்ஷான் அவர்களின் ஒருங்கிணைப்பிலும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையானது, நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் நிந்தவூர் ஆயுள்வேத வைத்தியசாலை என்பவற்றின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்திருந்த, உலக எயிட்ஸ் தின பிரதான நிகழ்வும், மர நடுகையும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.பி. அப்துல் வாஜித் அவர்களின் தலைமையில் (01.12.2023) இடம்பெற்றது.

"சமூகங்களை வலுப்படுத்துவோம்; எயிட்ஸைத் தடுப்போம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் திருமதி எஸ்.ஆர்.இஸ்ஸடீன் அவர்கள் கலந்து சிறப்பித்த அதேவேளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரிவுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.