புதிய நிருவாகசபை





 வி.சுகிர்தகுமார் 0777113659   


 அக்கரைப்பற்று மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்கத்திற்கான புதிய நிருவாகசபை தெரிவு செய்யப்பட்டது.
கடந்த 15.12.2023 அன்று காலை 9 மணியளவில் அக்கரைப்பற்று வை.எம்.சி.எ மண்டபத்தில் இடம்பெற்ற சங்கத்தின் மீள் புனரமைப்பு கூட்டத்தின் போதே புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டது.
நீண்ட காலமாக மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்கத்திற்கான நிருவாகத்தெரிவு இடம்பெறாத நிலையில் சங்கத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன.
இது தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கவனத்தில் கொண்டு நீண்டகாலமாக சங்கம் இயங்காமைக்கான காரணத்தை கண்டறிந்து சங்கத்தின் யாப்பிற்கமைய பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்து அவரது தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது புதிய தலைவராக சீனித்தம்பி மாணிக்கவாசகம் தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக இராசையா கிசோகாந்த் பொருளாளராக தியாகராஜா சிறிலக்சிக்கா மற்றும் 18 நிருவாக சபை உறுப்பினர்களும் எதிர்வரும் இருவருட நிருவாக சபைக்காக தெரிவானார்கள்.
இக்கூட்டத்தில் அக்கரைப்பற்று 8-1 மற்றும் அக்கரைப்பற்று 9 பிரிவுகளுக்கான கிராம உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமூக சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.