வானிலை ஆய்வு மையம்
டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதி, பொது மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையமும், தமிழ் நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவும் அறிவுறுத்தியுள்ளனர்.
"புயல் கரையை கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும்வரை பொது மக்கள் வெளியில் வராமல் இருக்க வேண்டும்," என வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்திருந்தார்.
மிக்ஜாம் புயலால் கனமழையுடன் 60-70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் அல்லது நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும் மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் 4 ஆம் தேதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment