அக்கரைப்பற்று சித்திக் ஹாஜியாரைக்,கொலை செய்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்





(புதுப்பிக்கப்பட்ட செய்தி)

அம்பாரை நீதிமன்ற பதில் நீதிபதி அசோக அவர்களால், அக்கரைப்பற்று சித்திக் ஹாஜியாரின் கொலையுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர் ஜனவரி 8ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் 18 வயது நிரம்பிய சசிகரன் தனுஸ்கன்  என்பவராவார்.இவர் அக்கரைப்பற்று காந்தி வீதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வாங்காமத்தில் மரணித்தவரின் ஆட்டுப் பண்ணை காலை வீட்டில் குடியிருந்தவராவார்.

 கொலைசெய்யப்பட்டவருடன் சம்பள முரண்பாடு பற்றி பேசிய வேளையில், தனக்கு அவர் அடித்ததாகவும், பின்பு அவரைத் தாக்குவதற்கு கம்பு ஒன்றைத் தேடிச் சென்றதாகவும், கம்பு இல்லாததால், கோடரியால் கொத்திக் கொலை செய்ததாகவும் குறிப்பிட்ட சந்தேக நபர் பொலிசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

 குறிப்பிட்ட சந்தேந நபரை இறக்காமம் பொலிஸ் சார்ஜான்ட் தசீர் அம்பாரை நீதவான் நீதிமன்ற வழக்கிலக்கத்தில்  (B/4925/2023) ஆஜர்படுத்தியிருந்தார்.





 (முந்தைய செய்தி)

அக்கரைப்பற்றை சேர்ந்த சித்திக் ஹாஜியார் சடலமாக மீட்பு!  வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் 


இறக்காமம் – வாங்காமம் பகுதியில்,அக்கறைப்பற்றைச் சேர்ந்த சித்திக் ஹாஜியார் என்ற நபர் (63 ) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


நேற்றைய தினம் தனது ஆட்டுப்பண்ணைக்கு சென்ற அவர் காணாமல் போயிருந்த நிலையிலயே இன்று காலை அவரின் ஜனாசா வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.முதலாளியை கொலை செய்த இளைஞர்கள்


அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் இடம்பெற்றிருக்கிறது பின்னர் நேற்று முழுவதுமாக அருகில் இருந்த வீடு ஒன்றில் மறைக்கப்பட்டு நேற்று இரவு அதிகாலை வேளையில் அருகிலுள்ள கரும்பு காணிக்குள் வீசப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது 

இச்சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பல வருடங்களாக இருப்பிடம் கொடுத்து அவர்களுக்கு தொழிலும் கொடுத்து அதற்கான ஊதியமும் கொடுத்த சிறந்த ஒரு நல்ல மனிதர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்பது தெரிய வருகிறது 

முதலாளியிடம் இருந்த முதலாளிக்கு சொந்தமான ஆடுகளை திருடி விற்பனை செய்ததன் காரணமாக அதில் ஏற்பட்ட குளறுபடியே இக்கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

சடலம் வாங்காமம் பகுதியில் உள்ள கரும்பு காணி ஒன்றினுள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை நீதிமன்ற நீதவான் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இவரிடம் வேலை செய்த நபர்களிடம் 75 ஆடுகள் உள்ள பண்ணையில் 17 ஆடுகளை மாத்திரம் அவதானித்த அவர் இதனை பற்றி வினவியபோது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததாத தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவம் தொடர்பில் 21 மற்றும் 19 வயது இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்