அடைமழையில் மூழ்கியது,அம்பாரை





 அம்பாறை  மாவட்டத்தில் தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகிறது.


பெரும்பாலான வயல் வெளிகள் வெள்ளக் காடாக காட்சிளிக்கிறது.

வீதியெங்கும் வெள்ளம் தேங்கி நிற்கிறது. காரைதீவு பிரதேசத்தில் வயல் நிலங்கள் பூரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

 தாழ் நிலங்களில் குடியிருப்பவர்களின் நலன் கருதி அடைபட்டுள்ள தோணாக்களை துப்பரவு  செய்யும் பணிகள் உள்ளுராட்சி சபையினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

தாழ் நிலங்களில் அதிகம் மழை நீர் தேங்கி நிற்பதால் மக்களின் நாளாந்த  வாழ்வியலில் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. 

சில இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து இடம் பெயர வைத்துள்ளது.

கூடவே பிள்ளைகளின் கல்வியும் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. 

வயல் கடற்றொழிலுக்கு பொதுவாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காரைதீவு பிரதேசத்தில்  மழை நீர் தேங்கி நிற்காமலும் நுளம்புகள் பெருகாமலும் தோணாக்கள் கால்வாய்கள் வெட்டப்பட்டு நீர்  கடலுக்குச் சென்றடையும் வகையில் சுத்தம் செய்யப்படுகிறது.