மகளிர் மகா சங்கத்திற்கான புதிய நிருவாக சபை




 


நூருல் ஹுதா உமர்


கிராம மட்டத்தில் சிறுவர்களின் உரிமை, பாதுகாப்பு, அபிவிருத்தி, சிறுவர் நலன் மற்றும் மேம்பாடு மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள்,  பெண்கள் எதிர்நோக்கும் துஷ்பிரயோகங்கள், அவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்றவற்றை  கிராம மட்டத்தில் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள மகளிர் சங்கங்களை உயிரோட்டமுள்ளதாக செயற்திறன்மிக்க அமைப்புக்களாக  புதுப்பிப்பித்து  மீளுருவாக்கம் செய்யும் வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அத்தொடரில்,  இறக்காமம் பிரதேச செயலகத்தினை உள்ளடக்கிய பிரதேச மட்ட மகளிர் மகா சங்கத்திற்கான புதிய நிருவாக சபை தெரிவு மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் (பதில்) எம்.எம்.கே. சாஜிதாவின் ஒருங்கிணைப்பில் இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில்  இடம்பெற்றது.

இதன்போது நடைபெற்ற புதிய மகளிர் மகா சங்க நிருவாக சபையில் தலைவியாக எஸ். நஜீமியா, செயலாளராக ஏ.கே. ஜாயிஸா,  பொருளாராக ஐ. பாஹிமா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் ஏனைய நிருவாக சபை உறுப்பினர்களும் சபையில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர். எதிர்வரும் காலங்களில் பெண்கள் தொடர்பான அனைத்து விடயங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள், வாழ்வாதார உதவிகள், நலநோன்புத்திட்டங்கள் அனைத்தும் இம் மகளிர் மகா சங்கங்களின் ஊடாகவே நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் உளவளத்துணை உத்தியோகத்தர்  ஏ.எச்.றகீப்,  சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.ஐ. பஸீனா, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பி. யஷோதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்