மாணவர் பாராளுமன்ற நிகழ்வு




 


( வி.ரி.சகாதேவராஜா)


சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளி பிரதேச  வீரத்திடல் அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தின் முதல்  மாணவர் பாராளுமன்ற நிகழ்வு 
நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு பார்வையாளர்களாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா, வலய மாணவர் பாராளுமன்ற இணைப்பாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான எச். நைரூஸ்கான் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முறையான பாராளுமன்ற அமர்வு போன்று மாணவர் பாராளுமன்ற நிகழ்வு முறைப்படி செங்கோல் சபாநாயகர் பிரசன்னத்துடன் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் நடைபெற்றது.