ஆனைகட்டியவெளியில் செத்தல் மிளகாய் அறுவடை விழா




 


(வி.ரி. சகாதேவராஜா)

விவசாய திணைக்களத்தினால் முன்மாதிரி துண்டச் செய்கைக்காக வழங்கப்பட்ட கலப்பின செத்தல் மிளகாய் செய்கையின் அறுவடை விழா றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவுகளுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி கிராமத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவுக்கு பொறுப்பான தொழில்நுட்ப உத்தியோகத்தர் கே.கிலசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் வீ.பேரின்பராஜா தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் எஸ். சித்திரவேல் விவசாய பயிலுனர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

MICH Hybrid 1 எனும் மிளகாய் வர்க்கம் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு செத்தல் மிளகாய் உற்பத்தியை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக இது இடம்பெற்றது. மிளகாய் செய்கையில் ஏற்பட்ட நோய் பீடை தாக்கங்கள் பற்றியும் இதன்போது தொளிவூட்டல்கள் வழங்கப்ப்ட்டது. மேலும் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய Insect Proof Net மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தால் மானியமாக விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.