சரிகமப டைட்டில் வின்னராக மகுடம் சூடிய யாழ். சிறுமி கில்மிஷா.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷாவுக்கு www.ceylon24.com தமது வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகின்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய ரியலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தைப் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கியுள்ளார்.
Zee தமிழ் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய ரியலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தை பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமான சரிகமப இசை நிகழ்ச்சியில் மலையகத்தைச் சேர்ந்த அஷானி மற்றும் கில்மிஷா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்திருந்தனர்.
இதில் இறுதிப் போட்டிக்கு இரண்டாவது போட்டியாளராக கில்மிஷா தெரிவாயிருந்ததுடன், அஷானி இறுதித் தருணத்தில் போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஆறு போட்டியாளர்கள் பங்கேற்ற, இன்றைய இறுதிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இறுதிப்போட்டி இடம்பெற்றது.
அவர்களில் கில்மிஷா முதலிடம் பிடித்ததுடன், சரிகமப நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டுதுடன், அவருக்கான பணப்பரிசு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment