அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மஹாவித்தியால வீதியில், அடை மழையினால் வெள்ள நீர் தேங்கி நிறகும் காட்சியே இது. இந்தப் பகுதியிலுள்ள இரண்டு பிரதான பாடசாலைகளிலும் கல்வி கற்கும் சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களும் , பொது மக்களும் இவ் வீதியினைவெள்ளத்தில் கடந்து வேண்டியுள்ளது. அண்மையில் வீதியில் விழுந்த தனது சில்லறைப் பணத்தைப் பொறுக்கிய வேளையில், சிறுவன் ஒருவருக்கு அரவம் தீண்டி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சிறுவர் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இது உப்புக்கரச்சை, பிரதேசம் மழைக் காலத்தில் நீர் வடிந்தோடும் இடம் என்பதால், நீர் தேங்கித்தான் செல்லும் என்ற நினைப்பில், மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் மாநகர சபை ஊழியர்கள் எண்ணியிருப்பார்களேயானால் அதுவும் தவறான எடுகோளாகும்.
வடிகான்கான்கள் சுத்திகரிப்புச் செய்யப்படாமல் பன்நெடுங்கலாமாகக் காணப்படுகின்றது.மழை நீரை விட மண் தேங்கிக் கிடக்கின்றது. மழைக்கு முன் சுத்திகரிப்புச் செய்திருக்க வேண்டிய வடிகான்கள், மழைக்குப் பின்னும் சேறும் சகதியுமாகக் காணப்டுகின்றமைதான் வெள்ள நீர் வடிந்தோடாமைக்கு காரணமாகும்.
தற்போதுள்ள தேவை, குறிப்பிட்ட இடத்திலுள்ள வடிகான்களிலுள்ள நீர் வெளிச் சுத்திகரிப்புச் செய்யப்பட வேண்டியுள்ளது. மாநகர ஆணையாளரே இது உங்கள் கவனத்திற்கு
Post a Comment
Post a Comment