தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை காற்றாழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து வலுப்பெற்றுக் கொண்டே வருவதால், தமிழகத்தில் கன மழை மற்றும் சில இடங்களில் மிக கன மழையும் பெய்யவும் வாய்ப்பிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகர்கிறது. டிசம்பர் 3ம் தேதிவாக்கில் இது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல ஆய்வுத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, டிசம்பர் 2ம் தேதி புயலாக மாறலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இலங்கை கடல் பகுதியிலும் இதே நேரத்தில் மற்றொரு மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் ஒரு நாள் தாமதாக புயலாக மாறுகிறது.
ஞாயிற்றுகிழமை புயலாக மாறி டிசம்பர் 4ம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் புயலாக நிலவக் கூடும். சென்னை-மசூலிப்பட்டினம் அருகே 4ம் தேதி மாலை இது கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கன மழை இருக்காது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், வட தமிழக கடலோரத்தில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வுங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (01) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Post a Comment
Post a Comment