(வி.ரி.சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக வருடாந்த ஒளி விழா நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நேற்று (21) வியாழக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
அதிதிகளினால் மங்கல விளக்கேற்றப்பட்டதனை தொடர்ந்து அருட்தந்தை ஜீ. அம்றோஸ் (புனித பிரான்சிஸ் அசிசீயார் தேவாலயம்,குருக்கள்மடம்), அருட்திரு அ. நிரஞ்சன் (ஒளியேற்றும் உலக பணிச்சபை) ஆகியோரின் ஆசிச்செய்தியுடன் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
Post a Comment