(வி.சுகிர்தகுமார்) 0777113659
அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று கண்ணகிகிராமம் கண்ணகி மாகாவித்தியாலயத்தில் கல்விகற்ற மாணவி கவடாபட்டி கிராமத்தில் வசிக்கும் மேரி டுலுக்சிக்கா ரொசேரோ பாடசாலை வரலாற்றில் க.பொ.த (சா/த)பரீட்சையில் தோற்றி முதன் முதலாக 9A சித்தி பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்தார்.
கவாடப்பிட்டி பாலர் பாடசாலை மண்டபத்தில் லக்மி கரங்கள் அமைப்பின் இணைப்பாளர் தலைமையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் பாடசாலை அதிபர் இராசநாதன் மற்றும் நப்சோ நிறுவனத்தின் கள உத்தியோகத்தர் கோகுலன் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திவாகரன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயபாலா மாணவர்கள், பெற்றோர்கள், என பலர் கலந்து கொண்டனர்.
மிகவும் பின் தங்கிய கிராமத்தில் இருந்து சாதனை படைத்து பெருமை சேர்த்த மாணவிக்கும் பாடசாலைக்கும் வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Post a Comment
Post a Comment