(
வி.சுகிர்தகுமார்) 0777113659
சுமார் 6 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழிலை இழந்துள்ளனர். சுமார் 1000 இற்கு மேற்பட்ட கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக்கழகத்தின் 45 ஆவது வருட நிறைவை முன்னிட்டு நேற்று இரவு (10) இடம்பெற்ற மின்னொளியிலான இரவு நேர கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்டப்போட்டிகளின் இறுதிப்போட்டியில் கிரிக்கெட் போட்டியில் பொத்துவில் 'பிறி லயன்ஸ் ' அணியும், உதைபந்தாட்ட போட்டியில் திருக்கோவில் 'குட்நிக்;' அணியும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.
இழந்து 36 ஓட்டங்களை பெற்று எதிரணிக்கு 37 எனும் இலக்கை கொடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிறி லயன்ஸ் 5.5 ஓவர்கள் நிறைவினில் ஆறு விக்கட்டினை மாத்திரம் இழந்து 37 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற 30 கழகங்கள் கலந்து கொண்ட உதைபந்தாட்டப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு தெரிவான விநாயகபுரம் மின்னொளி மற்றும் திருக்கோவில் குட்நிக் அணிகள் சுவாரசியமான போட்டி ஒன்றை ரசிகர்களுக்கு வழங்கினர். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் இறுதி வரை இரு அணிகளும் கோல் போட தவறின.
இறுதியாக தண்டனை உதைமூலம் வெற்றி வாய்ப்பினை வழங்க நடுவர் முடிவு செய்ய 3இற்கு 4 எனும் அடிப்படையில் திருக்கோவில் குட்நிக் அணி வெற்றி பெற்றது.
அம்பாரை மட்டக்களப்பு திருகோணமலை உள்ளிட்;ட மாவட்டங்களை சேர்ந்த அணிகள் போட்டித்தொடர்களில் பங்கேற்றதுடன் வெற்றியீட்டிய அணிகளுக்கும் வீரர்களுக்கும் பெறுமதியான வெற்றிக்கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உரையாற்றுகையில் சிறந்த முறையில் 45 வருடங்களாக விளையாட்டுத்துறை மாத்திரமன்றி கல்வித்துறைக்கும் அளப்பரிய பங்காற்றி வரும் மின்னொளி அணியினை பாராட்டினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் இந்த நாட்டிலே இடம்பெற்றுவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 6 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழிலை இழந்துள்ளனர். சுமார் 1000 இற்கு மேற்பட்ட கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த இருவருடங்களாக நிலவுகின்ற முறையற்ற பொருளாதார கொள்கையே இதற்கு காரணம்.
இந்நிலையில் எமது கையில் உள்ள ஓரே ஆயுதம் கல்வியாகும். போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் கல்வி என்கின்ற ஆயுதமே எம்மை பலப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment