காரைதீவில் 24 மாணவர்களுக்கு 9 ஏ சித்தி




 


( வி.ரி.சகாதேவராஜா)

நேற்று வெளியான க. பொ. த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி *காரைதீவு பிரதேச பாடசாலைகளில் மொத்தமாக 24 மாணவர்கள் 9A* சித்திகளை பெற்றுள்ளனர்.

காரைதீவு இ.கி.ச பெண்கள் பாடசாலையில் 17 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

விபுலாநந்த மத்திய கல்லூரியில் 05 மாணவர்களும்
சண்முகா மகா வித்தியாலயத்தில்  02 மாணவர்களும் 9 ஏ சித்தி பெற்றுள்ளனர்.

காரைதீவு கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஆ.சஞ்சீவன் சிறப்பு சித்தி பெற்ற 24 மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.