Smart class room) வகுப்பிற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு




 


பாறுக் ஷிஹான்)

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட  அல் பஹ்ரியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) முதலாவது இலத்திரனியல் வகுப்பறை(Smart class room)  வகுப்பிற்கான  உபகரணங்கள் வழங்கும்  நிகழ்வு செவ்வாய்க்கிழமை  (7) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

 குறித்த நிகழ்வில் முதலில் அதிதிகள்  மாலை அணிவிக்கப்பட்டு  நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர்   தேசிய பாடசாலை கீதங்கள் இசைக்கப்பட்டு   நிகழ்வுகள் ஆரம்பமானது.

நிகழ்வின் முதலில் கிராஅத் ஓதப்பட்டு வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.குறித்த வரவேற்புரையினை தலைமையுரையை பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் நிகழ்த்தினார்.

 நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம்  மற்றும் கௌரவ அதிதியாக  ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும்  கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும்  கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டு   பல்வேறு துறைகளில்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைத்தனர.

மேலும் அதிதிகள் பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.


எதிர்காலத்தில் குறித்த ஸ்மாட் வகுப்பறையை மாணவர் நலன் கருதி  தனித்துவமாக மாற்றி அதற்கு தேவையான மேலதிக உபகரணங்களை பெற்றுத் தருவதற்கு தனது   ரஹ்மத் பவுண்டேஷன்  ஊடாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு  ரஹ்மத் மன்சூர் உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.