திறப்பு விழா





 வி.சுகிர்தகுமார் 0777113659   

 அக்கரைப்பற்று பிரதேசத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கோளாவிலில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட அம்மன் கலாசார மண்டபம் மற்றும்  அம்மன் அறநெறிப்பாடசாலைக்கான புதியகட்டட திறப்பு விழாவும் இன்று (05) வைபவ ரீதியாக இடம்பெற்றது.
அம்மன் இல்ல பவுண்டேசன்  ஏற்பாட்டில் அம்மன் இல்லத்தின் பணிப்பாளர் வே. வாமதேவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவனானந்த ஜீ மஹராஜ் கலந்து கொண்டதுடன் அவரது திருமுன்னிலையில் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் ரெ.சுவாகர் கலந்து கொண்டதுடன்  கௌரவ அதிதியாக அம்மன் இல்ல பவுண்டேசன் போசகர் எஸ்.கமலதாஸ்,  மற்றும் அம்பாறை மாவட்ட இந்துகலாசார மாவட்ட உத்தியோகத்தர்  கு.ஜெயராஜி ஆலையடிவேம்பு பிரதேச இந்து  கலாசார உத்தியோகதத்தர் திருமதி சர்மிளா பிரசாந் சிவனருள் பவுண்டேசன் பொருளாளர் எஸ்,ஜனாத்தனன் மற்றும் அம்மன் இல்ல நிர்வாகத்தின் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், பாலர்பாடசாலை ஆசிரியர்கள், இல்ல மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதிகாலை விசேட பூசைகள் ஆரத்தி வேதபாராயணம்'என்பன இடம்பெற்றதுடன்  சுவாமி ஜியினால் விசேட ஹோம பூசை இடம்பெற்றது.
தொடர்ந்து இல்ல வளாகத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கான அபிசேகம் பூஜைகள் இடம்பெற்றதுடன் சம்பிரதாயபூர்வமாக நந்தி கொடியேற்றப்பட்டு கட்டடத்திற்கான நினைவுக்கல் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இதன் பின்னராக கட்டடம் திறந்து வைக்கப்பட்டதுடன் பூஜைகளும் இடம்பெற்றது.
திறந்து வைக்கப்பட்ட அறநெறிப்பாடசாலை கட்டத்தில் எதிர்காலத்தில் பண்னிசை, பரதநாட்டியம், யோகாசணம், வயலின், மிருதங்கம், வயலின், கதாபிரசாங்கம்,சொற்பொழிவு, மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான  பயிற்சிகளும் இல்ல நிர்வாகிகளுடன்  இணைந்து மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர்' கு.ஜெயராஜியின் ஒத்துழைப்போடு இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.