பிரதேச மட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்.






(சர்ஜுன் லாபீர்)

கல்முனை பிரதேசத்தில் பாடசாலை மட்டங்களில் சுனாமி அனர்த்த ஒத்திகை நிகழ்வுகளை நடத்துவதற்கு அம்பாறை மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்பாடுகளை செய்துள்ளது.அந்த வகையில் கல்முனை பிரதேசத்தில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் மற்றும் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளும் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

 அதிபர்கள்,கரையோரம் பேணும் உத்தியோகத்தர்கள்,அனர்த்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என பல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


UNDP மற்றும் SLRCS நிதியுதவியுடன் கல்முனை கல்வி வலயத்தில் மிகவும் பாதிக்கக்கூடிய மேற்படி இரு பாடசாலைகளுக்கான ஒத்திகை நிகழ்வு மிக விரைவில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.