பாராட்டு





( காரைதீவு  சகா)

அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கிழக்கு மாகாண மட்ட  சிறுவர் சித்திரப் போட்டியில் சாதனை புரிந்த மாணவர்களை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா பாடசாலைக்கு சென்று பாராட்டினார்.

இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரியில் இருந்து மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா தலைமையில் பாடசாலையில் நேற்று நடைபெற்றது.

மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற ஏ.எம். பாத்திமா நுஸைபா மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்ற எம்.கே. யூசுப் ஸயான் ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ. அப்துல் மஜீத் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான மஹ்மூத் லெவ்வை,பூ. பரமதயாளன், ஏ.நசீர், உதவி கல்விப் பணிப்பாளர்களான வி.ரி. சகாதேவராஜா, எம் எம் எம்.ஜௌபர் சித்திர பாட வளவாளர் எஸ்.எல். அப்துல் முனாப் அதிபர் எம்.ஐ. மாஹிர் 
பிரதி அதிபர் ஹிதாயா மீராலெவ்வை, உதவி அதிபர் ஏ.எம்.எஸ். இர்பானா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.