பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபரித வளர்ச்சி அடைந்து வருகின்றது





 வி.சுகிர்தகுமார் 0777113659 


 பொதுமக்களின் பங்களிப்புடன் வளர்ச்சி அடைந்து வரும் வைத்தியசாலைகளில் பனங்காடு பிரதேச வைத்தியசாலை கிழக்கு மாகாணத்தில் முதல் நிலை பெறுகின்றது. இவ்வைத்தியசாலையினை பொதுச்சொத்தாக கருதி பொதுமக்கள் செயற்படுவதானாலேயே இன்று இந்நிலை அடைந்துள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நேற்று (19) இடம்பெற்ற பொதுமக்களின் நிதிப்பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயில் மற்றும் அரச நிதியில் நிர்மாணிக்கப்பட்ட மேல் மாடிக்கட்டட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பனங்காடு பிரதேச வைத்தியசாலையானது மிகவும் அபரித வளர்ச்சி அடைந்து வருகின்றது. இதற்கு பிரதான காரணம் இங்கு வாழும் மக்கள் இதனை அவர்களது சொத்தாக நினைத்து செயற்படுவதே. இவ்வாறு அனைவரும் அரச சொத்துக்களை பொதுச்சொத்தாக நினைத்து நடந்து கொண்டால் அக்கிராமங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும் என கூறினார்.
மேலும் வைத்தியசாலையின் ஆளணி உள்ளிட்ட குறைபாடுகளும் விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி வழங்கினார்.
வைத்தியசாலைக்கு வருகை தந்த ஆளுநருக்கு வைத்தியர் குணாளினி சிவராஜ் தலைமையிலான வைத்தியர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து மகத்தான வரவேற்பளித்தனர்.
இதன் பின்னராக வைத்தியசாலையின் நுழைவாயிலை சிறுவர்களின் கரங்களினால் திறந்து வைத்தார். தொடர்ந்து கட்டடத்திற்கான பெயர்பலகையினை திரைநீக்கம் செய்து வைத்தார்.
இதேநேரம் இடம்பெற்ற கூட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு செயலாளருமான வி.பபாகரன் வரவேற்று உரையாற்றியதுடன் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தார். பின்னர் ஆளுநரை பொதுமக்கள் சார்பில் ஆலய தலைவர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டீ.ஜி;.எம்.கொஸ்டா கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணி;ப்பாளர் ஜ.எல்.எம்.றிபாஸ், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு செயலாளருமான வி.பபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Ok