அட்டாளைச்சேனையில், சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்தவர்களை ஆள்அடையாளங் காண்பதற்காக விளக்க மறியல்





அட்டாளைச்சேனையில் , கடந்த ஞாயிறு அன்று, வைத்தியசாலைக் கட்டிடத்தை திறக்கவந்த சுகாதார அதிகாரிகளை கடமையைச் செய்ய விடாமல் தடுத்து நிறுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட  3 சந்தேக நார்கள் இன்றைய தினம் அக்கரைப்பற்று பொலிசாரினால்  ஆள் அடையாளங் காண்பதற்காக  அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்ப்பட்டனர்.

குறித்த சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட இன்னுஞ் சிலரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்க்ப்பட்டு வருவதாக அக்கரைப்ப்ற்றுப் பொலிசார் இன்று செவ்வாயக் கிழமை மாலை தெரிவித்திருந்தனர்.

குறித்த விசாரணைகள் நிநைவடையாததாலும், ஆள் அடையாள அணிவகுப்பொன்றை நடத்துவதற்காகவும், 22ந் திகதி புதன் கிழமை வரை குறித்த சந்தேக நபர்களை விளக்கமறியலில்  வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிமன்ற மேலதிக நீதிபதி ரிசிபா ரஜிவன் கட்டளை பிறப்பித்துள்ளார்.