#Rep/RiyaadMohideen
அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்று ஆயிஷா பாலிகா மகளிர் தேசிய பாடசாலை சாதனை✅️✅️
தற்போது வெளியாகிய புலமை பரீட்சை முடிவுகளில் அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா மகளிர் தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் Mohamed Anas Farhath Fathima 190 புள்ளிகளை பெற்று அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமான பரீட்சையில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் நம் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்திய அதிகாரியும், அக்கரைப்பற்று அந் நூர் சமூக கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவருமாகிய Mohamed Abeebullah Anas
மற்றும் அக்கரைப்பற்று ஆயிஷா மகளிர் தேசிய பாடசாலையில் உயர் தர விஞ்ஞான பிரிவில் ஆசிரியராக கடமை புரியும் Umar Lebbe Zinis ஆகியோர்களின் மூன்றாவது புதல்வியுமாவார்.
அந் நூர் முன்பள்ளி பாடசாலையில் கல்வி பயணத்தை ஆரம்பித்த இம்மாணவி தொடர்ந்தும் அந் நூர் மாலை நேர மதரசாவில் அல் குர்ஆன் கற்கை நெறியினை பூர்த்தி செய்து பின்னர் அட்டாளைச்சேனை அஷ்பால் வின்னர்ஸ் அகடமியின் மனன பிரிவில் சேர்ந்து இதுவரைக்கும் 8 ஜூசூக்களையும் மனனம் செய்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அல்ஹம்துலில்லாஹ்.
இம்மாணவியின் கல்வி பயணத்தில் உறுதுணையாக இருந்து நெறிப்படுத்தி வழிகாட்டிய பெற்றோர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் அக்கரைப்பற்று கோட்ட மடடத்தில்
✅️ குறித்த️ ஆயிஷா பாலிகா மகளிர் தேசிய பாடசாலையில் இருந்து 29 மாணவர்களும்
✅️ அல் Munawwara Jc இல் இருந்து 28 மாணவர்களும்
✅️ Zahira Vidyalaya,Akkaraipattu இல் இருந்து 28 மாணவர்களும்
✅️ Ak Boys vidyalaya இல் இருந்து 25 மாணவர்களும்
✅️ As-Siraj Junior Vid இல் இருந்து 22 மாணவர்களும்
✅️ Akkaraipattu Junior Vidyalaya Al-Falah இல் இருந்து 17 மாணவர்களும்
✅️ பள்ளிக்குடியிருப்பு Muhammathiya ஜூனியர் கல்லூரியில் இருந்து 09 மாணவர்களும்
✅️ katheriya வித்யாலயத்தில் இருந்து 03 மாணவர்களும்
✅️ Hijra வித்யாலயத்தில் இருந்து 03 மாணவர்களும்
✅️ bathur வித்தியாலயத்தில் 01 மாணவரும்
✅️ paddiyadippitty Ar Raheemiya வித்தியாலயத்தில் 01 மாணவரும்
வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர் என்பதும் இங்கு பாராட்டப்படவேண்டியது.
Post a Comment
Post a Comment