ஊடகவியலாளர் மாநாடு




 


கல்முனை சாஹிராக் கல்லூரியின் 75வது ஆண்டு பவள விழா தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு

நூருல் ஹுதா உமர், யூ. கே. காலிதீன் 

கல்முனை சாஹிராக் கல்லூரியின் 75வது வருடத்தை பூர்த்திசெய்து
பவள விழா தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு கல்லூரியின் முதல்வர் எம்.ஐ. ஜாபீர் தலைமையில் இன்று (16) மாலை கல்லூரியில் நடைபெற்றது.

இப்பிராந்தியத்தில் பல்லாயிரக் கணக்கானோருக்கு கல்வியூட்டிய கல்முனை சாஹிரா என்ற கல்வித்தாய் இன்று 2023.11.16 ஆம் திகதி தனது 75 வது வருடத்தை பூர்த்திசெய்து பவளவிழாவைக் கொண்டாடுகிறது.

கல்முனை சாஹிராவின் 75வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வருடம் முழுவதும் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பும் பவள விழாவை முன்னிட்டு உத்திக பூர்வ இலச்சினை அறிமுக விழாவும் பாடசாலையின் முதல்வர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் இடம்பெற்றது

உருவாக்கம் பெற்றது.


கல்முனையின் கல்வியின் பொற்காலம் அன்றைய தினம் மர்ஹும் எம்.ஐ. அப்துல் காதர் பதில் ஸ்தாபக அதிபராகவும், எம். எம். தாஹிம் முதல் ஆசிரியராகவும் கொண்டு ஓலைக் குடிசையில் உருவாக்கப்பட்ட பாடசாலையான வரலாறு.

சுமார் 13 மாதங்கள் நிரந்தர அதிபர் இன்றி இயங்கிய இப்பாடசாலைக்கு திகாரியைச் சேர்ந்த மர்ஹும் எம். ஏ. மீராலெவ்வை 1951.01.01ம் திகதி நிரந்தர அதிபராக நியமனம் பெற்றார்கள்.

1953ம் ஆண்டின் அன்றைய அரசாங்கத்தின் கல்விக் கொள்கைக்கு அமைவாக ஆங்கில மொழியிலிருந்த பாடசாலை தமிழ் மொழி பாடசாலையாக மாற்றம் பெற்று அதன் பின்னர் மகா வித்தியாலயம், மத்திய மகா வித்தியாலயமாக விருந்து இன்று முதல்தர ஏ தரத்திலுள்ள தேசிய பாடசாலையாக உருவெடுத்தது என்பது வரலாறு எமக்கு கூறுகின்றது. 

இதற்காக தியாகங்கள் செய்த நபர்கள் மற்றும் அடைவுகள் தொடர்பில் விரிவாக விளக்கமளித்த அதேவேளை இதனால் பாடசாலையின் கல்வி கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் எவ்வித மாற்றத்தினையோ அல்லது பாதிபினையோ ஏற்படுத்தமாற்றாது எனவும், பவளவிழாவை பாடசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் கல்வி மேன்பாட்டுக்கு எவ்வாறு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்ற விடயங்களை ஊடகவியலாளர்களுக்கு எடுத்துக்கூறினார்.


இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாடசாலையின் அபிவிருத்திக் குழுவின் நிறைவேற்றுக் குழுச் செயலாளர் வைத்தியர் எம்.எச். சனூஸ் காரியப்பர் அவர்கள், சாஹிராவில் கற்றவர்களும், நலன்விரும்பிகளும் சாஹிரா தாயின் முன்னேற்றத்துக்கு கைகோர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் எம்.என்.எம். தில்ஷான் கருத்துத் தெரிவிக்கும்போது பவளவிழா கொண்டாட்டம் என்பதை விட பாடசாலை மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேற்படி நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்களான எம்.எச்.எம். அபுவக்கர், எம்.எச்.எம். தன்சில், உதவி அதிபர் எம்.ஜெமில், பாடசாலையின் ஆசிரியர் சங்க செயலாள் ஸசட். ஏ. ஜின்னா ஆகியோர் இதன் போது பிரசன்னமாகிருந்தனர்