(வி.ரி.சகாதேவராஜா)
பாண்டிருப்பு அறிஞர் அண்ணா மன்றம் நடத்தும் முப்பெரு நூல் வெளியீட்டு விழா கடந்த(4)சனிக்கிழமை மண்டபத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மையதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் கிழக்கு பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ச. நவநீதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
இங்கு சரவணமுத்து கணேசமூர்த்தி கவிஞர் சரவணன் எழுதிய "உயிர்ப்பின் முகவரி" சிறுகதை தொகுப்பு நூல், திருமதி தனலட்சுமி முரசொலிமாறன் எழுதிய "அரசியல் சமூகவியல் அறிமுகமும்" ஆய்வு கட்டுரை தொகுப்பு நூல், சரவணமுத்து நரேந்திரன் விவேகவெளி தமிழேந்திரன் எழுதிய "தாயுன் தமிழும்", கவிதை தொகுப்பு நூல் ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டது.
இதற்கு ஜேர்மன் தமிழருவி வானொலி, சென்னை தமிழியல் ஆய்வுமையம், கவிஞர் முனைவர் கோ. மோகனரங்கன் அனுசரணை வழங்குகின்றார்கள்.
இலக்கிய அதிதியான பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
Post a Comment
Post a Comment