அத்துமீறி குடியேறியுள்ளவர்கள் உடன் வெளியேறவும்!




 


வி.சுகிர்தகுமார் 0777113659 


 அரச காணியில் அத்துமீறி குடியேறியுள்ளவர்களை உடன் வெளியேறுமாறு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் சம்மந்தப்பட்டவர்களுக்கு எழுத்து மூலமான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாச்சிக்குடா கிராம அலுவலர் பிரிவில் வடக்கு பிரதான வீதி கிழக்கு கருங்கொட்டித்தீவுக்குளம் மேற்கு தில்லையாறு தெற்கு அரச காணி எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் அத்துமீறி குடியேறியுள்ளவர்களுக்கே இவ்வாறு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதி நில அளவை திணைக்களத்தின் வரைபட இலக்கம் PP 334/89 B படி அரச காணி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அரச காணியில் இருந்து வெளியேறுமாறும் அல்லது காணியை அரச காணி கட்;டளைச்சட்டத்தின்படியாக குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் மேற்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது