அக அமைதி பயிற்சி முகாம்




 


அக விழிப்புணர்வு செயற்பாட்டின் மூலம் சுயகற்றலை விருத்தி செய்து  மாணவர்கள் தங்கள் சொந்த தொலைநோக்கத்தை தீர்மானிக்கும் இரண்டு நாள் பயிற்சி பட்டறை மொனராகலையில் நடைபெற்றது.


ஈ.கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மொனராகலை விபுலானந்தா தமிழ் மகா வித்யாலயம் மற்றும் ஸ்ரீ சண்முகா தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 11 மாணவர்களுக்கு இப் பயிற்சி பட்டறை நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இதற்கென e- kalvi Charity Fund Inc அமைப்பின் செயலாளர் இளங்கோ வினாசித்தம்பி       இருநாட்களிலும் கூடவிருந்து  அவதானித்துக்கொண்டிருந்தார்.



இந் நிகழ்வானது உளம்நிறை வாழ்க்கைக்கான லம்போதர  நிறுவனத்தின் ஸ்தாபகரும் திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளருமான  தினகரன் ரவி தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் e- kalvi அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளரும்  ஹோலிக்குறோஸ் மகாவித்தியாலயத்தின் அதிபருமான அருட்சகோதரி சிறிய புஸ்பம் பட்டறை க்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.


 பயிற்சி பட்டறை விசாகம்
வளவாளராக ஆசிரிய ஆலோசகர்களான ரி.விஸ்வஜித்தன், எஸ்.தயாகரன் ,அதிபர் வி.சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களை உளநெருக்கிடைகளில் இருந்து விடுவித்து சுயகற்றலுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 

அவுஸ்திரேலியாவில் இயங்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பழையமாணவர்கள் நிதி அனுசரணை வழங்கினார்கள்.