இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய செயற்றிட்டம்





 (விரி.சகாதேவராஜா



" நேர்மையான இலங்கை " எனும் தொனிப்பொருளின் கீழ்  இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய செயற்றிட்டம் தொடர்பான பயிற்சிபட்டறை களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம்  தலைமையில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இச் செயலமர்வு இடம்பெற்றது.

நம் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பெரும் பொறுப்பு எமக்கு தேவையான வளங்களை பயன்படுத்திவிட்டு எஞ்சிய வளங்களை எதிர்கால தலைமுறைக்காக பாதுகாத்து வைப்பதேயாகும்.

இந்த நோக்கை அடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு  வருகின்ற பயிற்சிநெறியில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விளக்கம் மற்றும் சட்ட ஏற்பாடுகள், அவற்றினால் ஏற்படும் பாதக விளைவுகள் என்பன தொடர்பாக வளவாளர்களான பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் விளக்கமளித்தனர்.

அரச நிறுவனங்களில் இடம்பெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக சம்பவ கற்கைகள் மூலமும் உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.  

இந்த செயலமர்வானது பிரதேச அலுவலக உத்தியோகத்தர்களுக்கு பல கட்டங்களாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.