(வி.ரி.சகாதேவராஜா)
இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த செல்வி.நிவேதிகா இராசையா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கனடிய அமைப்பொன்று இலங்கையில் முதல் முதலாக இந்த போட்டியை கடந்த மூன்று மாத காலமாக நடத்தியது .கொழும்பில் நடைபெற்ற இந்த தெரிவில் முதல் சுற்றில் 120 பெண்கள் நாடளாவிய ரீதியில் இருந்து கலந்து கொண்டனர். இறுதிச்சுற்றில் 15 பேர் கலந்து கொண்டார்கள்.
அதில் முதலாவது இடத்தில் நிவேதிகா இராசையாவும் இரண்டாவது இடத்தில் ஆச்சர்யா யோகராஜனும் மூன்றாவது இடத்தில் சந்திரகுமார் விதுர்ஷாவும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விழாவில் தெரிவான அழகுராணிகள் கிரீடம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
காரைதீவைச் சேர்ந்த செல்வி.நிவேதிகா இராசையா காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையாவின் புத்திரி என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment