திறந்து வைப்பு




 


நூருல் ஹுதா உமர்


இறக்காமப் பிரதேச செயலகத்தில் பொதுமக்களுக்கு கிடைக்குப் பெறும் சேவைகளை மிக எளிதாகவும், துரிதமாகவும், நேர விரயமின்றியும் பொதுமக்கள் தங்களது சேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான பல்வேறு வகையான துரித வேலைத் திட்டங்கள் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸான் (நளீமி) அவர்களின் தலைமையில்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


அதன் முதற்கட்டமாக பொதுமக்கள் தங்களது சேவைகளை துரிதகதியிலும், வினைத்திறனாகவும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கில் “பொதுமக்கள் சேவைப் பணியகம் மக்கள் பாவனைக்காக  பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் (நளீமி) அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நஸீல், கணக்காளர் திருமதி. பாத்திமா றிம்ஷியா அர்ஷாட், நிருவாக உத்தியோகத்தர் எம்.எம். முஹம்மட் தௌபீக், கிராம நிலதாரி நிருவாக உத்தியோகத்தர் எச்.பி.என். யசரத்ன பண்டார, சமுர்த்தி தலைப்பீட முகாமையாளர் ஏ.எல்.நௌபீர், மற்றும் காணி உத்தியோகத்தர் என்.எல்.எம்.மாஹீர்  உட்பட கிளைத் தலைவர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்த காரியாலயத்தில் பரீட்சை கட்டணங்கள் செலுத்துதல், பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், வாகன அனுமதிப் பத்திரம் வழங்கல், வாகன உரிமை மாற்றம், வருமானச் சான்றிதழ், கால்நடைகள், போக்குவரத்து அனுமதி பத்திரம், மஹாபொல உதவித் தொகை போன்ற பல சேவைகளை பொதுமக்கள் ”பொதுமக்கள் சேவை பணியகம் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.