( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த ஏ. நசீர் நேற்று (22) புதன்கிழமை பதவியேற்றார்.
இப் பதவியேற்பு நிகழ்வு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா முன்னிலையில் நேற்று கோட்டக் கல்விப்பணிமனையில் நடைபெற்றது.
ஏலவே சம்மாந்துறை கோட்டக்கல்வி பணிப்பாளராக இருந்து தற்போது சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபராக இருக்கும் எம்.ஜனோபரிடமிருந்து புதிய பணிப்பாளர் நசீர் ஆவணங்களை பொறுப்பேற்றார்.
சம்பவத்திரட்டு புத்தகத்தில் ஒப்பமிட்டு பாரமெடுத்தார்.
நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா, கணக்காளர் சீ.திருப்பிரகாசம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான அறபாத் மொகைடீன், திருமதி நிலோபரா,
கோட்டக் கல்விப் பணிப்பாளர் பூ. பரமதயாளன், உதவி கல்விப் பணிப்பாளர்களான வி.ரி.சகாதேவராஜா, எம்எம்எம். ஜௌபர், சித்திர பாட வளவாளர் எஸ்.எல். அப்துல் முனாப் ஆசிரிய ஆலோசகர்களான ரி.எல்.றைஸ்டீன் எம்.அன்வர் நிர்வாக உத்தியோகத்தர் முஷரப் உள்ளிட்ட அதிபர்கள் கலந்து கொண்டனர்.
ஜனாப் நசீர்
ஏலவே வலயத்தின் உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளராக சிறப்பாக சேவையாற்றி வந்தவராவார்.
அவருக்கான நியமன கடிதத்தை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா கடந்த (20) திங்கட்கிழமை அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்திருந்தார்
Post a Comment
Post a Comment