( வி.ரி. சகாதேவராஜா)
இலங்கை அரசாங்கத்தின் அரசகரும மொழி கொள்கையை அமுல் படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் நிந்தவூர் கோட்டக்கல்வி அலுவலகத்தில் நடாத்தப்பட்ட 150 மணித்தியாலங்களைக் கொண்ட சிங்கள மொழிக்கற்கை நெறியினை (25 நாட்கள்) வெற்றிகரமாக பூர்த்தி செய்த 96 ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான , சான்றிதழ் வழங்கும் விழா நேற்று முன்தினம் நிந்தவூர் அல்-அஷ்ரக் மத்திய மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) காசிமி மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இப்பாடநெறிக்கு அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரின்ஸ் சேனாதீர கிழக்கு மாகாண அரசகரும மொழிகள் திணைக்களத்தின் இணைப்பாளர் ஜே.பி.பல்லவி ஆகியோர் இதற்கான அனுமதியை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் யூஎல்எம். சாஜித் முன்னாள் நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஷரிபுடின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், கௌரவ அதிதிகளாக நிந்தவூர் அல்-அஷ்ரக் மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் அப்துல் கபூர் கலந்துகொண்டனர்.
Post a Comment
Post a Comment