பரிசளிப்பு நிகழ்வு !




 


(நூருல் ஹுதா உமர்)


கல்முனை கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளின் தரம் 3 மற்றும் தரம் 4 வகுப்புகளின் கவின்நிலைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளரும், உதவிக்கல்வி பணிப்பாளருமான யூ.எல். றியால் அவர்களின் ஒழுங்குப்படுத்தலில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் தலைமையில் நடைபெற்றது. 

ஆசிரியர்களின் முறையான கலைத்திட்ட முகாமைத்துவ செயற்பாடுகள், மாணவர்களின் மனவெழுச்சி செயற்பாடுகள், புத்தாக்க சிந்தனைகள், கற்றல் கற்பித்தல் செயன்முறையில் நவீன தகவல் சார் தொழில்நுட்ப சாதனங்களின் பிரயோகம், பெற்றோர் தரவட்ட பங்களிப்பு, பொலித்தீன் அற்ற வகுப்பறை கழிவு முகாமைத்துவம் என்பவற்றின் ஊடாக உயிரோட்டமானதும், செயற்பாடுகளூடான புலன் சார்ந்த மறைமுக கற்றல் மாணவர்களிடத்தில் உருவாகின்ற "என்னுடைய அழகான வகுப்பறை" என்ற எண்ணக்கரு அடிப்படையில் இந்த கவின்நிலைப் போட்டி நடைபெற்றதாக நிகழ்வில் உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்கள் தெரிவித்தார்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற தரம் -3,4 வகுப்பாசிரியர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபீர், பீ. ஜிஹானா ஆலிப், ஆசிரியர் ஆலோசகர்களான வை.ஏ.கே.தஸ்னீம், எம்.எம். சியாம், வளவாளர் எஸ்.எம்.எம். அன்சார் உட்பட கல்முனை கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.